ஆப்பிள் கிரெடிட் கார்டு செயல்படும் விதம் குறித்த அணைத்து தகவல்களையும் கோல்மேன் சேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் கிரெடிட் கார்ட் எண்கள், சிவிவி உள்ளிட்ட தகவல்கள் ஏதும் இல்லாத கிரெடிட் கார்டை அறிமுகம் செய்தது. இதற்காக, ஆப்பிள் நிறுவனம் மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்காவின் கோல்மேன் சேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டது. அமெரிக்காவின் கோல்மேன் சேக்ஸ் நிறுவனம் ஆப்பிள் கிரெடிட் கார்ட் செயல்படும் விதம் குறித்த தகவல்களையும் ஆப்பிள் கார்டின் விதிகளையும் தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும் 28 நாட்களுக்குள் குறிப்பிட்ட தேதியில் பணத்தை திருப்பிச் செலுத்துபவர்களுக்கு, ஆப்பிள் கார்டில் இருந்து செலவளித்த பணத்துக்கு வட்டியில்லை என்றும் ஆண்டுக் கட்டணம், பரிமாற்றக் கட்டணம், அபராதக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் இல்லை என அதில் பதிவிட்டுள்ளது. மேலும், ஆப்பிள் ஐடி, கடன் உச்சவரம்பு விவரங்கள், இரு கட்ட அங்கீகரிப்பு தொழில்நுட்பம், வங்கிக் கணக்குகள் பயன்படுத்தும் விதம், பயன்படுத்தத் தகுதியுள்ள சாதனங்கள், பலன்கள், பணம் செலுத்தும் விவரம் உள்ளிட்ட விவரங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.