Categories
உலக செய்திகள்

விண்வெளியில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள்… சீன விண்வெளி நிலையம் வெளியிட்ட புகைப்படம்….!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கட்டமைப்பு பணிகளை செய்து வரும் சீன வீரர்கள் அங்கு உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

சீன அரசு தங்களுக்கென்று தனியாக விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான தீவிர பணியில் ஈடுபட்டிருக்கிறது. அதற்காக கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று, சென்ஸோ 13 என்ற விண்கலத்தில் ஜாய் சிகாங், யே குவாங்ஃபு என்ற இரண்டு வீரர்கள் மற்றும் வாங் யாப்பிங் என்ற வீராங்கனை ஆகிய மூவரும் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அங்கு அனுப்பப்பட்டனர்.

விண்வெளியில் மிகக் குறைவான புவியீர்ப்பு அளவு காணப்படுகிறது. அதனால் உடல் நல பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, அவர்கள் மூவரும் உடற்பயிற்சி மேற்கொண்டனர். அந்த  புகைப்படத்தை சீன விண்வெளி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

Categories

Tech |