உலக அளவில் இன்றைய நாளில் கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் இதனுடைய மொத்த பாதிப்பு எண்ணிக்கை, இறப்பு விகிதம், குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை நாள்தோறும் அவ்வப்போது தகவலாக பார்த்து வருகிறோம். அந்த வகையில்,
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.07 கோடியாக தற்போது அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 7.51 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் சிகிச்சையின் மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1.36 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 64 ,651 மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.