Categories
உலக செய்திகள்

இன்று தொடங்க இருக்கும் விண்வெளி பயணம்…. விண்வெளியில் கால்பதிக்கும் இரண்டாவது இந்திய பெண்மணி….!!

விண்வெளிக்கு செல்லும் நான்காவது இந்தியர் என்ற பெருமையை ஆந்திராவை சேர்ந்த சிரிஷா பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் விர்ஜின் கேலடிக் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த விண்வெளி நிறுவனம் இரட்டை விமானங்களுக்கு இடையில் ‘யூனிட்டி 22’ விண்கலம் பொருத்தப்பட்டு இன்று(ஜூலை 11) விண்வெளிக்கு புறப்பட இருக்கிறது.

இந்த விண்கலம் ஹைபிரிட் ராக்கெட் மூலம் விண்வெளி பயணத்தை தொடங்கும் என்றும் 50 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன், சிரிசா பண்ட்லா, பெத் மோசஸ் மற்றும் கொலின் பென்னட் ஆகியோர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

Categories

Tech |