ஓடும் காரில் மின்னல் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா Kansas மாகாணத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக சென்று கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து முன்னால் சென்ற காரில் மீது மின்னல் தாக்கிய வீடியோ காட்சியை பின்னால் சென்ற கார் பதிவுசெய்துள்ளது.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் காரின் மீது மின்னல் தாக்கியதவுடன் காரின் வேகம் குறைந்து கார் நின்றது. இதனைத் தொடர்ந்து காரில் இருந்தவர்களை காப்பாற்ற அருகிலிருந்த வாகன ஓட்டிகள் சென்று குழந்தை உட்பட 5 நபர்களையும் பத்திரமாக மீட்டனர்.