எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியர்கள் புதிய வழியை கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவில் 9.5 லட்சம் இந்தியர்கள் மூன்று வகை விசா அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே கடந்த மார்ச் மாதம் H1B விசாக்களுக்கு, 3.08 லட்சம் இந்திய விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா 72% விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல் நிராகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு பதிலாக கனடாவிற்கு சென்றுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றக் குடியேற்ற விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே கனடாவில் 2016 ஆம் ஆண்டை விட 2018 பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 170 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.