Categories
உலக செய்திகள்

இதுவரை 32.8 கோடி தடுப்பூசிகள்…. மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது…. அறிவிப்பு வெளியிட்ட பிரபல நாடு….!!

அமெரிக்காவில் 32.8 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி எராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசிகள் மட்டுமே தீர்வு என்பதால் உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளாகி முதலிடத்தை பிடித்த அமெரிக்காவும் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை தொடர்ந்து மக்களுக்கு செலுத்தி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 18,13,39,416 பேருக்கு முதல் தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும் 15,58,84,601  பேருக்கு இரண்டு தடுப்பூசி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை மொத்தமாக 32,81,52,304 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |