கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போட்டு கொள்வது, தனிமைப்படுத்தல், பயணத்தடை போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அம்பர் நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த செயல் திட்டம் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் EMA-வால் அங்கீகரிக்கப்பட்ட 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.