Categories
உலக செய்திகள்

”வறுமையில் இருந்து மீண்டெழும் இந்தியா” உலக வங்கி தகவல் …..!!

1990-களிலிருந்து இந்தியாவின் வறுமை நிலையின் குறியீடு, ஏழு விழுக்காடு வரை வளர்ச்சி கண்டுள்ளதாக உலக வங்கி நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1990ஆம் ஆண்டிலிருந்து கணக்கீடு செய்து பார்க்கையில், இந்தியா வறுமை நிலையில் ஏழு விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் இது 15 ஆண்டின் சராசரி அளவை பொறுத்தமட்டில் பாதியாகக் குறைந்துள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த வளர்ச்சியானது மனித மேம்பாட்டில் இந்தியா வலுவான முன்னேற்றங்களைக் கண்டதினால் நிகழ்ந்துள்ளது என உலக வங்கி விளக்கியுள்ளது.

அதேநேரத்தில் இந்தியாவின் வளர்ச்சி தொடரும் என்ற நிலையில், நாடு பல சவால்களை எதிர்கொள்ளும் சூழலில் இருப்பதாகவும், உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதற்காக இந்தியா தங்களின் மக்கள் தொகையைக் கருத்திற்கொண்டு, வளங்களைச் செழுமையான முறையில் பாதுகாத்துத் தக்கவைத்துக் கொள்வது அவசியம் எனக் கருத்து தெரிவித்துள்ளது.

Categories

Tech |