Categories
உலக செய்திகள்

நடுவானில் வெடித்து சிதறிய விமானம்…. 2 பேர் உயிரிழப்பு….!!

விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் சக்சஸ் மாகாணத்திலுள்ள குட்வுட் ஏர்ஃபீல்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ உதவிக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில் விமானத்தில் பயணம் செய்த 2 நபர்களும் உயிரிழந்தனர். அதில் ஒருவர் Bulls Cross மற்றும் மற்றொருவர் Gosport பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்த காரணம் வெளியிடப்படவில்லை.

Categories

Tech |