இளவரசர் சார்லஸ் டயானாவின் திருமண நிகழ்வில் வெட்டப்பட்ட கேக் துண்டு தற்போது ஏலம் விடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் சார்லஸ் டயானாவின் திருமணம் கடந்த 1987 ஆம் ஆண்டு விமர்சையாக நடந்தது. இந்த திருமண விழாவில் வெட்டப்பட்ட கேக் துண்டின் ஒரு பகுதி மகாராணியின் ஊழியரான Moyra Smith என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 8க்கு 7 இஞ்ச் நீளமும், 28 அவுன்ஸ் எடையும் உடைய அந்த கேக் துண்டை Moyra பிளாஸ்டிக் பேப்பர் ஒன்றில் சுற்றி பாதுகாப்பாக வைத்துள்ளார்.
இதனிடையே கடந்த 2௦௦8 ஆம் ஆண்டு Moyra விடமிருந்த அந்த கேக் துண்டை பழங்கால பொருள் சேமிக்கும் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனம் தற்போது அரச குடும்பத்தார் வழங்கப்பட்ட கேக் ஏலத்துக்கு வர உள்ளது என்றும் ஆனால் இதை உண்ணக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.