பிரிட்டனைச் சேர்ந்த தம்பதியினருக்கு லாட்டரியில் 12.4 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.
பிரிட்டன் Trafford பகுதியை சேர்ந்த Sharon மற்றும் Nigel Mather தம்பதியினருக்கு லாட்டரியில் 12.4மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது. ஆனால் தம்பதியினர் பரிசு விழுந்ததை உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இதனிடையே தம்பதியினர் தங்களுக்கு பரிசு விழுந்த செய்தியை உறவினர்களுக்கு கூறாததில் எவ்வித சுயநலம் இல்லை.
இதனிடையே தம்பதியினர் தம் உறவினர்கள் மற்றும் நண்பர்களில் 30 பேரை தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் லாட்டரி விழுந்த தொகையிலிருந்து சிறு தொகையை காசோலையாக எழுதிக் கொடுத்துள்ளனர். இதனிடையே இதுகுறித்து அவர்கள் கூறுகையில் பரிசு விழுந்தது மகிழ்ச்சிக்குரிய செய்தி எனினும் வெளியில் சொல்லி பெருமை கொள்வது எங்களுக்கு பிடிக்கவில்லை. எனவே எங்களின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மறைமுகமாக உதவி செய்தோம் எனவும் தெரிவித்துள்ளனர்.