இங்கிலாந்தில் ஒருவருக்கு கிடைத்த புதையல் அவரை ஒரே நாளில் இரண்டு கோடிக்கு அதிபதி ஆக்கியுள்ளது.
இங்கிலாந்தில்West Dean கிராமத்தில் மெட்டல் டிடெக்டர் மூலம் புதையல் தேடும் ஒருவருக்கு புதையல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தப் புதையல் அவரை ஒரே நாளில் பணக்காரர் ஆக்கியுள்ளது. இதனிடையே அவருக்கு மிகப்பெரிய புதையல் ஒன்றும் கிடைக்கவில்லை. அந்த நபருக்கு ஒரு இஞ்ச் விட்டமும் 0.15 அவுன்ஸ் எடையும் உடையட ஒரே ஒரு நாணயம் மட்டும் தான் கிடைத்துள்ளது.
ஆனால் அந்த நாணயத்தின் மதிப்பு 200,000 பவுண்டுகள் அதாவது இந்திய ரூபாயில் அதன் மதிப்பு 2கோடிக்கும் அதிகமாகும். ஏனெனில் அந்த நாணயத்தின் ஒன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட்டதாகும். அதாவது சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.