ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் யூரோ கால்பந்து போட்டியில் இத்தாலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர் Ursula von der Leyen கடந்த வெள்ளிக்கிழமை யூரோ கால்பந்து போட்டியில் இத்தாலி வெற்றி பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தாலி மற்றும் இங்கிலாந்து இடையிலான நடந்து முடிந்த இறுதிப்போட்டியில் இத்தாலி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது கோப்பையை கைப்பற்றியது .இந்த வெற்றி பிரிட்டன் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் Ursula von der Leyen கூறிய கருத்து பிரித்தானியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் 27 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஒரு நாட்டுக்கு ஆதரவாக கருத்து கூறியது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதால் Leyen இத்தாலிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.