வனப்பகுதி ஒன்றில் மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரிட்டன் வில்ட்ஷயர் பகுதியில் உள்ள காட்டுக்குள் மனித எலும்புக்கூடு கிடப்பதை வனத்துறையினர் கண்டறிந்ததை தொடர்ந்து அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எலும்புக்கூடுகளை கைப்பற்றி டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல்துறையினர் வனப்பகுதியில் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளதால் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது என்றும் அந்த எலும்புக்கூடுகள் பழமை வாய்ந்த எலும்புக்கூடுகள் எனவும் கூறினர். மேலும் இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் அதற்கான முடிவுகள் பொதுமக்களுக்கு உடனுக்குடன் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.