பிரிட்டன் இளவரசர்கள் ஹரியும், வில்லியமும் பேசிக்கொண்ட மற்றொரு காரணம் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் இளவரசர் ஹரி அரச குடும்பத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வசித்து வருவதால் அவர் குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வும் அரச குடும்ப ரசிகர்கள் மற்றும் பிரிட்டன் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று ராணி டயானாவின் 60வது பிறந்தநாள் நிகழ்வில் தாயின் உருவ சிலை திறப்பில் சகோதரர்கள் இருவரும் சந்திக்க இருக்கின்றனர் என்ற செய்தி பிரிட்டன் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் வகையில் மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. அதில் இளவரசர் வில்லியமும், ஹரியும் யூரோ கால்பந்து போட்டியில் ஜெர்மனி இங்கிலாந்தின் இடையேயான வெற்றி குறித்து இருவரும் தொலைபேசியில் பேசிக் கொண்டனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.