Categories
Uncategorized உலக செய்திகள்

பிரதமரே விதியை மீறலாமா?…. கேள்வி எழுப்பிவரும் எதிர்தரப்பினர்….!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விதியை மீறி நடந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2019 கிறிஸ்மஸ் பண்டிகையை Mustique என்ற பகுதியில் தனது மனைவி குழந்தைகளுடன் சிறப்பாக கொண்டாடினார். இதனிடையே கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய ஆடம்பரச் செலவுகளுக்காக கட்சி நிதியை எடுத்து செலவிடக் கூடாது என்று கூறி சட்டம் பிறப்பித்தார்.

இந்நிலையில் தற்போது பிரதமர் தன்னுடைய சொந்த செலவுகளுக்காக கட்சி நிதியை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து எதிர்க்கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான கணக்குகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பிரதமர் தனது சொந்த கொண்டாட்டத்திற்காக கட்சி நிதி பயன்படுத்தியுள்ளார் என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |