பிரிட்டனுக்கு எதிராக வாதம் வைத்த ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தற்போது தன் முடிவில் இருந்து விலகியுள்ளார்.
ஜெர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரிட்டனை தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து தற்போது சேன்ஸலரான ஏஞ்சலா அரசுப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அவர் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் இருநாட்டு நல்லுறவு பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஏஞ்சலா மெர்க்கல் பிரிட்டன் மக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்து கொண்டு ஜெர்மனிக்கு வந்தால் அவர்கள் தனிமைப்படுத்துதல் இன்றி நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று கூறினார். மேலும் தற்போது ஜெர்மனி செல்லும் பிரிட்டன் மக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதி இருக்கும் என்றும் விரைவில் அவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து யூரோ கால்பந்து போட்டியில் ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஜெர்மன் 2.0 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றது. இதுகுறித்த கேள்வியில் ஏஞ்சலா மெர்க்கல் இங்கிலாந்து கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு அந்த வெற்றி இங்கிலாந்திற்கு தகுதியானது எனவும் கூறினார். இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின் ஏஞ்சலா மெர்க்கல் பின்வாங்கியுள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.