இளவரசி டயானாவின் உருவச் சிலையில் அவருடன் இருக்கும் குழந்தைகளின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசி டயானாவின் 60வது பிறந்தநாள் விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவில் தாய் இளவரசி டயானாவின் உருவச்சிலையை அவரது மகன்களும் இளவரசர்களும்மான வில்லியம் மற்றும் ஹரியும் திறந்து வைத்தார்கள். இந்நிலையில் அந்தச் சிலையில் இளவரசி டயானா இரண்டு குழந்தைகளுடன் நிற்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது ஏன்? என்ற காரணம் வெளியிடப்பட்டுள்ளது.
உருவச் சிலை இளவரசி டயானா இரண்டு குழந்தைகளுடன் நிற்பது போலவும் பின்னால் ஒரு குழந்தையின் முகம் தெரியாமல் கால்கள் மட்டும் தெரிவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரண்மனை வட்டாரம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இளவரசி டயானா தொண்டு நிறுவன பணிகளில் ஆர்வம் உடையவர் என்பதால் ஏழைக் குழந்தைகளுடன் இருப்பது போன்ற உருவ சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.