பிரிட்டன் இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமான செய்தியை கேட்டு ராணியார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் என அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மகன் இளவரசர் ஆண்ட்ரூவின் மகள் பீட்ரைஸ் ஆவார். இவருக்கு கடந்த ஜூலை மாதம் எட்வர்டோ மாபெல்லி மோஸ்சி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அரச குடும்பம் தற்போது இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமான செய்தியை கேட்டு ராணியார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் என்றும் ராஜ குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதை இனிப்புடன் கொண்டாடினர் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இளவரசி பீட்ரைஸ்க்கு பிறக்கப்போகும் குழந்தை மகாராணியாரின் 12-வது கொள்ளுப்பேரக்குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.