Categories
உலக செய்திகள்

இனி வானவேடிக்கைக்கு பதிலாக இப்படி பண்ணலாம்….. புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வேடிக்கை காட்டும் பிரபல நிறுவனம்….!!

பிரிட்டன் செலஸ்டியல் தொழில்நுட்ப நிறுவனம் வானில் பல டிரோன்களை வைத்து வேடிக்கை காட்டி வருகின்றது.

பிரிட்டனைச் சேர்ந்த செலஸ்டியல் தொழில்நுட்ப நிறுவனம் வானவேடிக்கை பதிலாக ஒளிரும் டிரோன்களை கொண்டு வானில் வேடிக்கை காட்டி வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளில் நடைபெறும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒளிரும் டிரோன்கள்களை வைத்து கண்காட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியிலும் செல்சியஸ் நிறுவனம் டிரோன்கள்களால் வேடிக்கை காட்டியது.

இந்த செல்சியஸ் நிறுவனம் 300 மிளிரும்டிரோன்களை வைத்து வானில் பல உருவ காட்சிகளை வேடிக்கை காட்டி வருகிறது. இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதில் மாசுக்கள், தீவிபத்துக்கள் போன்றவை ஏற்படுத்துவதால் எரிசக்தி ஆதாரங்கள் மூலம் இந்த ட்ரோன்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக  செல்சியஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

Categories

Tech |