Categories
லைப் ஸ்டைல்

“உலக புற்றுநோய் தினம்” இந்த 6 உணவுகளை சாப்பிடாதீங்க…. கவனமா இருங்க…!!

புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியல் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

ஆண்கள், பெண்கள் என்று இருவருக்குமே மார்பக புற்று நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதில் பெண்களுக்கு தான் அதிகமாக மார்பகப் புற்றுநோய் ஏற்படுகின்றது. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதில் மரபணு மாற்றங்கள், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவை பங்கு வகுக்கின்றன. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைபிடித்தல் மற்றும் சில உணவு முறைகள் போன்ற வாழ்க்கை முறை காரணிகள் மார்பக புற்றுநோயை  ஏற்படுத்துகின்றன. புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள் குறித்த பட்டியலை இப்போது பார்க்கலாம்.

ஆல்கஹால்:

அதிகப்படியான குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மார்பக புற்றுநோயுடன் தொடர்புடைய இதர ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும்.

துரித உணவுகள் (பாஸ்ட் புட்):

துரித உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கக்கூடும் மற்றும் அதிக எடை அல்லது பருமனான உடலை பெற வாய்ப்பு இருக்கும் போது மார்பக புற்றுநோய் ஆபத்து ஏற்படுகின்றது. இதனால் நீரிழிவு மற்றும் இதய நோய்களும் ஏற்படலாம்.

வறுக்கப்பட்ட உணவுகள்:

அதிகமான அளவில் வறுக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வது உங்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். 670 ஈரானியப் பெண்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் மார்பகப் புற்றுநோய் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து காரணிகள் வறுக்கப்பட்ட உணவு உட்கொள்வதால் தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்:

பதப்படுத்தப்பட்ட இறைச்சி பன்றி இறைச்சி, சாஸேஜஸ் மற்றும் ஹாம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடும்போது பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மார்பக புற்றுநோயை தடுப்பதற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி குறைத்துக்கொள்வது நல்லது.

அதிகப்படியான சர்க்கரை:

சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உங்களுடைய உடல் எடை அதிகரிக்கும். மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இவ்வாறு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கொண்ட உணவு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க செய்கிறது மேலும் வயிறு மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்று நோய் உட்பட பல புற்று நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

வெள்ளை ரொட்டி மற்றும் அதிகமாக சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்ட சுட்ட பொருட்கள் உட்கொள்வதை நிறுத்தினால் போதும். முழு தானிய பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டு நலமாக வாழுங்கள்.

Categories

Tech |