Categories
டென்னிஸ் விளையாட்டு

”கடுப்பாகிய உலக சாம்பியன்” டென்னிஸ் மட்டையை தூக்கியெறிந்தார் …!!

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மகளிர் ஒற்றைய பிரிவின் இரண்டாவது சுற்றின்போது கோபமடைந்த நவோமி ஒசாகா, தனது டென்னிஸ் ராக்கெட்டை தூக்கியெறிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒசாகா பங்கேற்கும் போட்டிகளில் ரசிகர்கள் முழுவதும் இருக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர்.

இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்த்து சீனாவின் செங் சைசை ஆடினார். இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய நவோமி ஒசாகாவின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் செங் திணறினார். இதனால் முதல் செட்டை ஒசாகா 6-2 எனக் கைப்பற்ற, இரண்டாவது செட் ஆட்டம் தொடர்ந்தது.

இரண்டாவது செட் ஆட்டத்தில் ஒசாகா 1-2 என பின்தங்கினார். இதனால் விரக்தியடைந்த ஒசாகா, தனது டென்னிஸ் ராக்கெட்டை தூக்கியெறிந்தார். இதையடுத்து மீண்டும் தொடங்கப்பட்ட ஆட்டத்தில் 6-4 என இரண்டாவது செட்டைக் கைப்பற்றி ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

நவோமி  ஒசாகா

உலகின் நம்பர் 1 வீராங்கனையான நவோமி ஒசாகா கோபமடைந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது. மேலும் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் நவோமி ஒசாகவை எதிர்த்து இளம் வீராங்கனை கோகோ காஃப் ஆடவுள்ளார்.

Categories

Tech |