Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… உலக குத்துசண்டை சாம்பியன் பலி…. நிச்சயம் பழி வாங்குவோம்…. பயிற்சியாளர் ஆவேசம்…!!!

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட போரில் உக்ரைன் நாட்டை சேர்ந்த முதல் உலக குத்துச்சண்டை வீரர் உயிரிழந்திருக்கிறார்.

உக்ரைன் நாட்டில் ரஷ்யா ஒரு மாதத்தை தாண்டி தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மரியுபோல் என்ற முக்கிய துறைமுக நகரை பாதுகாப்பதற்காக அசோவ் சிறப்பு படை பிரிவினருடன், உக்ரைனின் பிரபல குத்துச்சண்டை சாம்பியனான மாக்சிம் காகலும் கைகோர்த்திருந்தார்.

அப்போது கடந்த 25ஆம் தேதியன்று அந்நகரில் ரஷ்ய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் மாக்சிம் காகல் உயிரிழந்தார். இதனை அவரின் பயிற்சியாளரான ஓலே ஸ்கைர்டா தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவர் குறிப்பிட்டிருந்ததாவது, இந்த போரில் துரதிஷ்டவசமாக சிறந்த வீரரை பறிகொடுத்து விட்டோம்.

அவர் ஒழுக்கம் மிகுந்த நேர்மையான நபர். சகோதரரே, உங்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். உன் இறப்பிற்கு நிச்சயம் நாங்கள் பழிவாங்குவோம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |