உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து_க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதால் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து வீராங்கனை பி.வி சிந்து_க்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்வீட்_டர் பக்கத்தில் பி.வி சிந்து_க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில் இந்தியாவை மீண்டும் பெருமை கொள்ளச் செய்திருக்கும் பி.வி.சிந்துவிற்கு வாழ்த்துகள்.பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கும் ஊக்கமளிப்பதாக அமையும் என்று பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து ட்வீட் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
The stupendously talented @Pvsindhu1 makes India proud again!
Congratulations to her for winning the Gold at the BWF World Championships. The passion and dedication with which she’s pursued badminton is inspiring.
PV Sindhu’s success will inspire generations of players.
— Narendra Modi (@narendramodi) August 25, 2019