உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து_க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதால் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து வீராங்கனை பி.வி சிந்து_க்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்வீட்_டர் பக்கத்தில் பி.வி சிந்து_க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பி.வி.சிந்து தங்கம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Congratulations @Pvsindhu1 for winning the BWF World Championship. This is a proud moment for the entire country.
Your magic on the court, hardwork and perseverance enthralls and inspires millions. Best wishes World Champion for all your future battles #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) August 25, 2019