Categories
உலக செய்திகள்

விடாது பெய்த மழை…. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள்…. 14 பில்லியன் டாலர் சேதம்….!!

சீனாவில் பெய்த கனமழையால் 14 பில்லியன் டாலர் பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஹெனன் மாகாணத்தில் உள்ள அணைகள் மற்றும் பாலம் உடைந்ததால் 60 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஜென்ங்கோவில் பெய்த கனமழையால் 99 பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஜென்ங்கோவில் வாழ்ந்து வரும் மக்கள் இரயில் சுரங்கப்பாதைகளிலும், கார்களிலும் தங்கி வருகின்றனர். இதனிடையே ஹெனன் மாகாணம் விவசாய நகரம் என்பதால் சுமார் 16 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 14 மில்லியன் டாலர்கள் பொருள்களும் சேதமடைந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |