Categories
உலக செய்திகள்

ஒரே நாள் பாதிப்பு எண்ணிக்கை 30,738…. விடாது துரத்தும் கொரோனா….!!

இந்தோனேஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,738 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக தினசரி 40ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  இதுவரை 34,40,396 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,738 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,604  பலியாகியுள்ளனர். இதனிடையே 28,09,538  பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 5,35,135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |