Categories
உலக செய்திகள்

அடடே..!! கொரோனா உயிரிழப்புகள் இருக்காதா….? ஆஸ்திரேலியாவில் புதிய கண்டுபிடிப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கொரோனா உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்கும் சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தடுக்கும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்திலுள்ள Griffith பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கொரோனாவை முற்றிலும் கட்டுபடுத்தும் ஒரு மைல் கல் எனும் சிகிச்சை முறையை கண்டுபிடித்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில் ஒரு மைல் கல் சிகிச்சை முறையானது நுரையீரலைத் தாக்கும் கொரோனா வைரஸை கண்டுபிடித்து தாக்கும் என்றும் இந்த சிகிச்சை முறை 99.9% வைரஸை அழிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிகிச்சை முறையானது புதிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் என்றும் இது கொரனோ உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |