ஜெர்மனியில் முனிச் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜெய்சங்கர், “அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் முன்பை விட தற்போது தேசியவாதத்தை அதிகம் முன்வைத்துவருகின்றன. இதனால் உலக நாடுகளின் பலதரப்பு பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. இதற்கு காரணம் என்ன?
கடந்த 20 ஆண்டுகளில் உலக பொருளாதாரம் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது. இது அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தேர்தலில் தேசியவாதம் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. தேசியவாதத்தை சில நாடுகள் ஆக்கப்பூர்வமாக முன்வைக்கிறது. பாதுகாப்பற்ற தன்மையை சில நாடுகள் கட்டமைத்து தேசியவாதத்தை பயன்படுத்துகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மை குறைந்துள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்றார்.