உலக கோப்பை டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் முக்கிய வீரராக இருப்பார் என்று கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய நடராஜன் உலக கோப்பையிலும் பங்கேற்பார் என்று விராட் கோலி தெரிவித்ததால் நடராஜன் உச்சபட்ச மகிழ்ச்சியில் உள்ளார். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தமிழக வீரர் வருன் சக்கரவர்த்தி தோள்பட்டை காயத்தால் விலகினார். இதனால் நம் நடராஜனுக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அடுத்து நவதீப் சைனி முதுகு வலியால் அவதிப்பட, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி ஒருநாள் போட்டியில் அறிமுக வாய்ப்பு பெற்றார். அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நடராஜன் டி20 தொடரில் முதல் போட்டியில் 3 விக்கெட் சாய்த்தார். மொத்தம் 3 போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்திய அணி 2க்கு 1 என்ற தொடரை வெல்ல, இந்த பந்துவீச்சின் காரணம். நெருக்கடியான நிலையில் சிறப்பாக பந்து வீசி அனைவரையும் கவர்ந்த நடராஜனை விராட்கோலி புகழ்ந்து பாராட்டினார்.
இவர் செயல்படுவதைப் பார்த்து வியந்தேன். மிகவும் பணிவானவர், கடின உழைப்பாளி, இடதுகை பந்துவீச்சாளர் எந்த ஒரு அணிக்கும் முக்கிய தேவை. தொடர்ந்து நன்றாக பந்துவீசி வந்தால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள டி20 உலக கோப்பை தொடரில் எங்களுக்கு உதவியாக இருப்பார் என்று அவர் கூறியுள்ளார்.