உலகக்கோப்பை கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் 4 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து தனது முதல் பேட்டிங்கை இங்கிலாந்து விளையாடி வருகின்றது.ஆட்டத்தின் முதல் ஓவரின் 2 வது பந்தில் தொடக்க வீரர் பேர்ஸ்டோ 0 ரன்னில் வெளியேறி நிலையில் ராய் , ரூட் ஜோடி அணியை மீட்டெடுத்தது.
அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராய் 53 பந்துகளில் 54 ரன்னும் , ரூட் 59 பந்துகளில் 51 ரன்னும் அடித்து அசத்தினர். பின்னர் மோர்கன் , ஸ்டோக்ஸ் இருவரும் தனது பங்குக்கு அரை சதம் அடித்து அசத்தினர். இதனால் அணியில் ஸ்கோர் வீதம் 6_யை நெருங்கிய நிலையிலேயே இருந்தது. இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 217 ரன் இருந்த போது இம்ரான் தாஹிர் பந்தில் 57 ரன் குவித்த மோர்கன் ஐடென் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி 39 ஓவர்களில் 227 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து ஆடி வருகின்றது.