Categories
தேசிய செய்திகள்

“உலகக்கோப்பை கால்பந்து போட்டி”….. ஜியோ மீது ரசிகர்கள் கடும் அதிருப்தி….. டிஜிட்டல் உரிமையை ரத்து செய்ய கோரிக்கை…..!!!!!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கத்தார் நாட்டில் நேற்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளனர். இங்கு நடைபெறும் கால்பந்து போட்டியானது டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறும் நிலையில், நேரடியாக சேனல்களிலும் ஓடிடி தளங்களிலும் போட்டி ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் டிஜிட்டல் உரிமையை ஜியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதன் காரணமாக ஜியோ செயலி ஓடிடி தளங்களில் கால்பந்து போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனையடுத்து நேற்று ஜியோவில் கால்பந்து போட்டியானது ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், ரசிகர்கள் அனைவரும் கொந்தளித்துள்ளனர். அதாவது நேற்றைய ஆட்டத்தின் ஒளிபரப்பு தரம் மிகவும் மோசமாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். மேலும் ஜியோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட திட்டத்தில் உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |