உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு தற்போது இருந்தே செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த போட்டியை முன்னிட்டு பிரபலமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5 சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் முதல் சர்வதேச ரோமிங் சலுகையின் விலை 1112 ரூபாய் ஆகும். இதில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன், 5 நாட்களுக்கு வேலிடிட்டி பலன்கள் கிடைக்கும்.
அதன்பிறகு ரூபாய் 1599 ரூபாய்க்கும் ரீசார்ஜ் செய்தால் 15 நாட்கள் வேலிடிட்டியுடன் 150 நிமிட வாய்ஸ் கால், உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான அழைப்புகள், இன்கம்மிங் கால்கள், 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்றவைகள் கிடைக்கும். இதனையடுத்து 3999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 250 நிமிடங்களுக்கு உள்ளூர் கால்கள், இந்தியாவுக்கான வாய்ஸ் கால், 250 நிமிடங்கள் இன்கம்மிங் கால்கள், 3 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்றவைகள் கிடைக்கும்.
இதைத்தொடர்ந்து 5122 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 21 நாட்கள் வேலிடிட்டியுடன் 5 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் 6,799 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 500 நிமிடங்களுக்கு உள்ளூர் கால்கள் மற்றும் இன்கம்மிங் கால்கள், இந்தியாவுக்கான அழைப்புகள், 5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்றவைகள் கிடைக்கிறது. இந்த சர்வதேச ரோமிங் ரீசார்ஜ் திட்டங்கள் கத்தார் நாட்டுக்கு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்