சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் உலக பொருளாதார கூட்டமைப்பின் 5 நாட்கள் உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் காணொலிக் காட்சி வாயிலாக இந்த மாநாட்டின் முதல் நாளில் உரையாற்ற உள்ளனர். உலக பொருளாதார கூட்டமைப்பால் சுவிட்சர்லாந்தில் இருக்கும் டாவோஸ் என்னும் நகரத்தில் கடந்த 50 வருடங்களாக இந்த உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2021 ஆம் வருடத்தில் இந்த உச்சி மாநாடு தள்ளிவைக்கப்பட்டது. எனவே, இந்த வருடத்திற்கான உச்சிமாநாடு, காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.