கனடா நாட்டின் ரொரன்ரோ மாகாணத்தில், வின்சென்ட் வான் கோ என்ற உலகப் பிரபலமான ஓவியரின் தலையை சுமார் 91 அடி உடைய வெப்பக் காற்று பலூனில் பொறித்து ஒவ்வொரு நகரமாக கொண்டுசெல்கின்றனர்.
கனடாவின் ரொறொன்ரோ நகரத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்லக்கூடிய வழியில் பிட்ஸ்பர்க்-ல் உள்ள ஓக்லாந்து நகருக்கு அருகில் சிறிது நேரம் அந்த பலூன் வைக்கப்பட்டது. மக்கள் அதனை பார்வையிட்டனர். அதாவது, இந்த வருடம் வான் கோவின் ஓவிய அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது.
அதனை விளம்பரப்படுத்தும் வகையில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து இந்த பலூன் உலக நாடுகளின் பல நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், பலூனில் வரையப்பட்டிருக்கும் இந்த தலைப்பகுதி, கடந்த 1887 ஆம் வருடத்தில் வான் கோவே, தன்னை வரைந்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
லைட் ஹவுஸ் இம்மெர்சிஸ் அமைப்பு மற்றும் இம்பேக்ட் அருங்காட்சியகம் சேர்ந்து வின்சென்ட் வான் கோவின் அருங்காட்சியகத்தை கனடாவில் திறந்திருக்கிறது. இது தொடர்பாக மக்களிடையே ஆர்வத்தை தூண்டும் வகையில் பெரிய வெப்பக்காற்று பலூனில் அவரின் முகத்தை பொறித்து காற்றில் பறக்கவிட்டுள்ளனர். பிட்ஸ்பர்க் கலங்கரை விளக்கத்தில் உள்ள ஓவியக் கூடத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இது பிப்ரவரி மாதம் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.