பிரான்சிலிருந்து பிரிட்டனுக்கு சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சிலிருந்து பிரிட்டனுக்கு சென்று கொண்டிருந்த படகில் 36 பேர் பயணம் செய்துள்ளனர். இதனிடையே படகு கால்வாய் ஒன்றை கடக்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் படகில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் காதலியுடன் வந்த எரித்ரியா நாட்டைச் சேர்ந்த 27 வயது இளைஞன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். தன் காதலன் தன் கண்முன்னே நீரில் மூழ்குவதை பார்த்த அவரது காதலிக்கு அவர் இறந்த செய்தி மட்டுமே சென்றடைந்தது.