பிரான்ஸ் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.
பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து Seine-et-Marne மாவட்டம் மற்றும் Vendée கடற்கரைக்கு முகக்கவசம் அணிய கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் Aube நகரத்திற்குச் சென்றிருந்த ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நாடு சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்றும் கொரோனா தடுப்பூசிகள் பெரும் பங்கு வகித்ததால் தான் இந்த நிலையை அடைய முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் சமூக சிந்தனையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட்டு இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.