பிரான்ஸ் நாட்டின் மாவட்டம் ஒன்றில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் கொரோனாவால் கடுமையான பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தது. இதனிடையே முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி போன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் சில ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் Seine-et-Marne என்ற மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் அது குறித்து அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தளர்வுகள் மே 19ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஒரு லட்சம் பேருக்கு 737 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு லட்சம் பேருக்கு 218 பேர் என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.