அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் மாற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ஜெர்மன் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சகம் தடுப்பூசிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி முதல் டோஸ் பெற்றுக்கொண்ட அனைவரும் இரண்டாவது டோஸ் மாடர்னா, பைசர், பயோ என்டர் ஆகிய தடுப்பூசிகளை இரண்டாவது டோஸாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்துள்ளது.
ஏனெனில் அஸ்ட்ராஜெனேகாவுடன் பிற தடுப்பூசிகள் இணைக்கப்படும் போது அதன் எதிர்ப்புத்திறன் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுவதால் இந்த அறிவுரை வழங்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துள்ளது. மேலும் இது டெல்டா கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.