Categories
உலக செய்திகள்

இனி இந்த பெயரை தான் சூட்ட போறோம்..! மாறுபாடடையும் கொரோனா வைரஸ்… WHO முக்கிய தகவல்..!!

உலக சுகாதார அமைப்பு நட்சத்திரக் கூட்டங்களின் பெயர்களை கொரோனா மாறுபாடுகளுக்கு சூட்டுவதற்கு பரிசீலிப்பதாக கூறியுள்ளது.

சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் மாறுபாடு அடைந்து பரவிவரும் கொரோனா வைரஸ்-க்கு கிரேக்க எழுத்துக்கள் மூலம் பெயரிடப்பட்டு வருகிறது. அதன்படி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஈட்டா, லோட்டா உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்று மாறுபாடடைந்து வரும் சூழலில் 24 எழுத்துக்கள் மட்டுமே கிரேக்க எழுத்து வரிசையில் உள்ளதால் இந்த எழுத்துக்களுக்கும் பிறகும் பெயர்கள் தேவைப்படும்.

எனவே உலக சுகாதார அமைப்பு கொரோனா மாறுபாடுகளுக்கு நட்சத்திரக் கூட்டங்களின் பெயர்களை சூட்டுவதற்கு பரிசீலிப்பதாக கூறியுள்ளது. அதேசமயம் உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப குழு தலைவர் மரியா வான் கெர்கோவ் பெண் தெய்வங்கள் அல்லது கிரேக்க கடவுளர் பெயரை சூட்டுவதற்கும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Categories

Tech |