உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அவசியம் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் மக்கள் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசியை சமநிலையாக செலுத்தாமல் இருப்பது தான் ஒமிக்ரான் பரவலுக்கு முக்கிய காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் உலக நாடுகள் தொற்று அதிகரித்ததும் அவசர அவசரமாக பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றன.
அது மிகப்பெரிய தவறு. உலக நாடுகள் தடுப்பூசியில் சமநிலை காட்டாமல் தொற்று பரவலை கட்டுப்படுத்தவே முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த நிலைமை நீடித்தால் இன்னொரு கொரோனா மாறுபாடு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று எச்சரித்துள்ளார். மேலும் இந்த பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால் தடுப்பூசி சமத்துவமின்மையை போக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த ஆண்டுக்குள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.