Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளை சத்தமின்றி தாக்‍கும் கொரோனா…… உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்‍கை

குழந்தைகளுக்‍கு திடீரென ஏற்படும் வயிற்று வலி, கொப்பளம், ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்‍கம் உள்ளிட்டவை கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறியாக இருக்‍கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்‍கான மருந்துகள் பல சோதனைக்‍ கூடங்களில் சோதிக்‍கப்பட்டு வருவதாகவும், ஆனால், கொரோனாவுக்‍கு எதிரான வலிமையான மருந்து இதுதான் என ஒன்றை சுட்டிக்‍காட்டி உறுதி செய்வது கடினமாக உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆட்கொல்லி வைரசான எச்.ஐ.வியை போல, கொரோனாவும், உயிர்ப்புடன் நம்முடனேயே இருந்துவிட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ், ஏராளமான குழந்தைகளை சத்தமின்றி தாக்‍கி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளிடம் ஏற்படும் கொரோனா தொற்று, கவாசாகி என்னும் அசாதாரண அழற்சி நோயின் அறிகுறிகளை கொண்டிருப்பதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, குழந்தைகளுக்‍கு திடீரென ஏற்படும் வயிற்று வலி, கொப்பளம், ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்‍கம், உள்ளங்கை, நாக்‍கு உள்ளிட்டவை கடுமையாக சிவத்தல் போன்றவை கொரோனா தொற்றின் அறிகுறியாக இருக்‍கலாம் என எச்சரித்துள்ளது.

Categories

Tech |