Categories
சினிமா தமிழ் சினிமா

உலக நாயகனின் “இந்தியன் 2″…. ரிலீஸ் எப்போது தெரியுமா…..? ரசிகர்களுக்கு செம மஜா தான்…..!!!!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் சித்தார்த்த ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அதோடு நவரச நாயகன் கார்த்திக் கூறிய வித்தியாசமான ரோலில் நடிக்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த வருட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய இயக்குனர் சங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் அதற்கு தகுந்தாற்போல் இந்தியன் 2 திரைப்படத்தின் சூட்டிங் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |