உலக பட்டினி ஆய்வறிக்கையில் 94-வது இடத்தில் இருந்த இந்தியா ஒரே ஆண்டில் 101-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள 116 நாடுகளிலும் பட்டினி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான உலக பட்டினி ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் 101-ஆவது இடத்தினை இந்தியா பிடித்துள்ளது. அதாவது 94-வது இடத்தில் இருந்த இந்தியா ஒரே ஆண்டில் 101-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் வங்கதேசம் 76-வது இடத்தையும், பாகிஸ்தான் 92-வது இடத்தையும் பிடித்து முன்னேறியுள்ளது. ஆனால் இந்திய நாடு பட்டினி கொடூரமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலிழும் இடம் பெற்றிருப்பது வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.