Categories
உலக செய்திகள்

பரபரப்பாக நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் போட்டி… இடையே திரையில் காட்டப்பட்ட காதல் ஜோடியின் காட்சி…. குழம்பிய ரசிகர் கூட்டம்….!!

இங்கிலாந்தில் நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் போட்டியின் இடையில் காட்டப்பட்ட காதலர்களின் காட்சியின் புகைப்படங்களை கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியை  காண ஏராளமான ரசிகர் கூட்டம் வந்திருந்தது. இதனிடையே இந்த ரசிகர் கூட்டத்தில் கிரிக்கெட் போட்டியை காண காதலிக்கும் ஒரு ஜோடியும் வந்துள்ளது. இதனை தொடர்ந்து கேமரா பார்வையாளர்கள் மீது திரும்ப அந்த ஆண் மோதிரத்தை கையில் வைத்துக்கொண்டு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியை ஸ்கைப் போர்ட்ஸ்(sky sports) தொலைக்காட்சி காட்டியதோடு ‘decision pending’ எந்த வார்த்தையும் திரையில் தோன்றியது.

 

இதனை தொடர்ந்து பார்வையாளர்களின் கவனமும் ஜோடியை உற்றுநோக்க அந்தப் பெண் மோதிரத்தை பெற்றுக்கொண்டு சம்மதம் தெரிவிக்கும் போது திரையில்  ‘she said yes!’ என்ற வார்த்தை மாறியது. மேலும் அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இந்நிலையில் இந்த காதல் காட்சியை இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

Categories

Tech |