Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டி…. பளுதூக்கும் வீரர் மாயம்…. விசாரணையில் தெரிய வந்த உண்மை….!!

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வந்த உகாண்டா பளுதூக்கும் வீரர் திடீரென மாயமான சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளதால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வீரர்கள் ஜப்பானிற்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ஜூலியஸ் செகிடோலெக்கோ டோக்கியோ ஜப்பானில் உள்ள ஒசாகாவில் இசுமிசானோ பகுதியில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதனிடையே கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள ஒலிம்பிக் வீரர்களை அழைத்தபோது டோக்கியோ மட்டும் மாயமாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரின் அறையில் ஒரு கடிதம் இருந்து வந்துள்ளது. அதில் உகண்டாவில் வாழ்வதற்கு பொருளாதார பிரச்சனை இருப்பதால் ஜப்பானில் தங்கி வேலை செய்யப் போவதாக எழுதி வைத்துச் சென்றுள்ளார். இதனிடையே ஜப்பானில் உள்ள புல்லட் ரயிலில் பயணப் பதிவு செய்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான முழு தகுதியைப் பெறவில்லை என்றும் வரும் செவ்வாய் என்று தனது நாட்டிற்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |