கட்டிட தொழிலாளி செய்த வேலைக்கு ஊதியம் தராததால் வீடுகளை இடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி Blumberg பகுதியில் கட்டிட பணி தொழிலாளர் ஒருவர் வீடுகளை கட்டியுள்ளார். இதனிடையே வீட்டு பணி முடிந்ததும் அவருக்கு தரவேண்டிய 425,000 பவுண்டுகள் ஊதியத்தை தர மறுத்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த கட்டிட பணி தொழிலாளர் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிய வீட்டின் பால்கனி மற்றும் கதவு ஜன்னல்களை இடித்து தள்ளியுள்ளார்.
இந்த வீடியோ காட்சியானது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டிட தொழிலாளி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்த விசாரணையில் 4.2 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.