வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கடந்த வாரங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் ஏராளமான பொருட்சேதமும், உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளது.Rhineland-Palatinate மற்றும் North Rhine-Westphalia ஆகிய இரு மாநிலங்களில் பெய்த மழையில் 170 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உள்விவகாரத் துறை அமைச்சர் Roger Lewentz இறந்தவர்களின் 64 எங்களை அடையாளம் காண முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மன் குடியிருக்காதவர்கள் என்பதால் DNA பரிசோதனை மேற்கொள்ள முடியாதவாறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இறந்தவர்களின் சடலங்களை ஏற்றி செல்ல வாகன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.