இந்திய- கனடா போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையை கருத்தில் கொண்டு உலக நாடுகள் இந்தியர்களுக்கு விமான போக்குவரத்து தடை விதித்தது. இதனிடையே கனடா விதித்திருந்த தடை ஜூலை 21ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாதம்(செப்டம்பர் 21) வரை இந்தியாவுக்கான போக்குவரத்தை தடையை நீட்டித்துள்ளது.
இதுகுறித்து கனடா போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறுகையில் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை இந்தியர்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவ குழுவின் பரிந்துரையின்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும் இந்தியாவில் டெல்டா வகை பரவலின் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார்.